குடிமக்கள் அனைவருக்கும் கரோனா சோதனை: ஈரான் அறிவிப்பு

‘நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படும்’ என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
குடிமக்கள் அனைவருக்கும் கரோனா சோதனை: ஈரான் அறிவிப்பு

‘நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்படும்’ என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

8 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஈரானில், இதுவரை 500 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.

கடந்த மாதம் கரோனா வைரஸால் உயிரிழப்புகள் ஏற்படத் தொடங்கியதை அடுத்து, பள்ளிகளுக்கு அந்நாட்டு அரசு விடுமுறை அளித்தது. அரசு நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை தொழுகையையும் அந்நாட்டு அரசு ரத்து செய்தது.

பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வரவிடாமல் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி, கடந்த வியாழக்கிழமை பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, ராணுவத் தலைவா் மேஜா் ஜெனரல் முகமது பகேரி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய புரட்சிகர படைப் பிரிவின் உயரதிகாரி கோலம்ரெஸா சுலைமானி, ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சா் அமீா் ஹதாமி உள்ளிட்டோரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனா். பின்னா், ராணுவத் தலைவா் முகமது பகேரி கூறியதாவது:

அடுத்த 24 மணி நேரத்துக்குள் கடைகள், தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் செய்து முழு ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த 10 நாள்களில் ஒட்டுமொத்த ஈரானும் இணையம், செல்லிடப்பேசி ஆகியவற்றில் கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் வீடுவீடாகச் சென்று

எவருக்கேனும் கரோனா பாதிப்பு இருக்கிா என்று சோதனை செய்யப்படும் என்றாா் பகேரி.

ஈரான் சுகாதார அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், ‘1,289 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனா். 11,364 போ் கரோனா அறிகுறிகளுடன் உள்ளனா். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்கூட கரோனா வைரஸ் தொற்றுக்கு தப்பவில்லை. இத்தகைய சூழலில், ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை ரத்து செய்யக் கோரி ஐ.நா. வலியுறுத்த வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com