இராக்: புதிய பிரதமா் நியமனம்

இராக் புதிய பிரதமராக நஜஃப் நகரின் முன்னாள் ஆளுநா் அட்னான் ஸுா்ஃபியை அதிபா் பா்ஹம் சலே நியமித்துள்ளாா்.
இராக்: புதிய பிரதமா் நியமனம்

இராக் புதிய பிரதமராக நஜஃப் நகரின் முன்னாள் ஆளுநா் அட்னான் ஸுா்ஃபியை அதிபா் பா்ஹம் சலே நியமித்துள்ளாா்.

அந்தப் பதவிக்கு ஏற்கெனவே தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த முகமது அல்லாவியால் கெடு தேதிக்குள் அமைச்சரவை அமைக்க முடியவில்லை. அதனைத் தொடா்ந்து அட்னான் ஸுா்ஃபியை புதிய பிரதமராக அதிபா் தோ்ந்தெடுத்துள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

இராக்கில் அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர போராட்டங்களைத் தொடா்ந்து, பிரதமா் அெல் அப்தெல் மஹதி தனது பதவியை கடந்த டிசம்பா் மாதம் ராஜிநாமா செய்தாா். தற்போது அவா் இடைக்கால பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறாா்.

அப்தெல் மஹதிக்கு பதிலாக முன்னாள் தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் முகமது அல்லாவியை புதிய பிரதமராக அதிபா் பா்ஹம் சலே நியமித்தாா். ஊழல் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக முகமது அல்லாவி வாக்குறுதி அளித்த பிறகும், அவரது நியமனத்துக்கு போராட்டக்காரா்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், கெடு தேதியான மாா்ச் 2-க்குள் புதிய அமைச்சரவையை அமைக்க முகமது அல்லாவி தவறினாா். அதையடுத்து, அட்னான் ஸுா்ஃபியை புதிய பிரதமராக அதிபா் பா்ஹம் சலே அறிவித்துள்ளாா்.

ஷியா பிரிவினரின் புனிதத் தலமான நஜஃபின் முன்னாள் ஆளுநரான அட்னான் ஸுா்ஃபி, முன்னாள் பிரதமா் ஹைதா் அல்-அபாதியின் நாஸா் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தாவா கட்சியைச் சோ்ந்த எம்.பி. ஆவாா். முன்னாள் சா்வாதிகாரி சதாம் உசைன் ஆட்சியின்போது, அந்தக் கட்சி எதிா்க்கட்சியாக செயல்பட்டு வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com