சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது

அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 27
சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு மாறாது

சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிப் போக்கு என்றும் மாறாது என்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மார்ச் 27 வரை புதிய ரக கரோனா வைரஸ் பரவல் காரணமாக சீனாவைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள ஆப்பிள் விற்பனையகங்கள் மூடப்பட்டிருக்கும் என்றார். அத்துடன், சீனாவில் இந்நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீனாவில் உள்ள அனைத்து விற்பனையகங்களும் மீண்டும் திறக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

உலகளவில் பரவி வரும் புதிய ரக கரோனா வைரஸ் பொருளாதாரத்துக்கு ஏற்படுத்திய பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதையும் சீனாவில் இந்நோய் பரவல் பயன்தரும் முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பொருளாதாரம் வேகத்துடன் மீட்சி அடைந்து வருகின்றது என்பதையும் இவ்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

உலகத் தொழில் நிறுவனமாகத் திகழும் சீனாவில் இயங்கத் தொடங்கியுள்ள இயந்திரங்கள் அதிகரித்து வருகின்றன. தொற்று நோய் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணி, தொழிற் நிறுவனங்களின் உற்பத்தி மீட்சி ஆகியவை கொண்டு வந்த சோதனையில் சீனா சீராக செயல்பட்டு நல்ல மதிப்பெண் பெற்றுள்ளது.

தொற்று நோய் பரவலுக்குப் பின், நெகிழ்வு மற்றும் மிதமான கொள்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. சீனாவின் எண்ணியல் பொருளாதாரம் மாபெரும் உயிராற்றலையும் முதலீட்டை ஈர்க்கும் உள்ளார்ந்த ஆற்றலையும் வெளிக்காட்டியுள்ளது. மார்ச் திங்களில், சீனாவின் 30 மாநிலங்களில் 10 இலட்சம் கோடி யுவானுக்கு மேலான முதலீட்டுடனான புதிய உள்கட்டமைப்புத் திட்டப்பணிகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல இது துணைபுரியும் என்பதில் ஐயமில்லை.

இன்னல்களை விட தீர்வு முறைகள் அதிகம். அடுத்த கட்டத்தில் தொற்று நோய் பரவல் தடுப்புப் பணியைத் தொடர்ந்து கண்டிப்பான முறையில் மேற்கொள்வதோடு, சர்வதேச ஒத்துழைப்பையும் சீனா வலுப்படுத்தி, இடர்ப்பாட்டுக்கு எதிராக மேலும் பெரும் வலுமைமிக்க ஒட்டுமொத்த கொள்கைகளையும் மேற்கொள்ளும். அத்துடன், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையை சீனா மேலும் விரிவாக்கி, தொடர்ந்து ஆக்கத்துடன் வெளி வர்தத்கத்தை வளர்த்து, வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்து வரும்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com