நோய்த் தடுப்பு பணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சுயநல அரசியல் வாதிகள்!

கொவைட்-19 நோய் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. பத்துக்கு அதிகமான நாடுகளில்

கொவைட்-19 நோய் உலகின் பல நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. பத்துக்கு அதிகமான நாடுகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள உள்ளன. சர்வதேசச் சமூகத்துக்கு நோய் தடுப்பு ஒத்துழைப்பு அவசரமாகத் தேவைப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள் பாதுகாப்புவாதம் மற்றும் சுயநலவாதத்தால், சர்வதேச ஒத்துழைப்புக்கான முயற்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

மருத்துவச் சிகிச்சைக்கு தேவைப்படும் பொருட்களை பிற நாடுகளில் வாங்குவதை குறைத்து, அமெரிக்காவில் இருந்து வாங்க செய்தற்கான திட்டத்தை, அமெரிக்க வெள்ளை மாளிகை தேசிய வர்த்தக ஆணையத்தின் இயக்குநர் பீட்டர் நவர்ரோ முன்வைத்தார் என்று அண்மையில் அமெரிக்க கொலம்பிய வானொலியில் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய வினியோக சங்கிலி, சந்தை மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டுத் தேர்வாகும். அரசியல் வழிமுறையின் மூலம், மருத்துவச் சிகிச்சைப் பொருட்களின் சங்கிலியை மாற்றுவது, உற்பத்தி பயன் மற்றும் தொழில் நிறுவனங்களின் நலனின் இழப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்க வணிகச் சங்கத்தின் கொள்கை துறை தலைமை அதிகாரி நெயில் பிரட்லி கூறுகையில், அமெரிக்க பொருட்களை வாங்குவது, மருந்துகள் மற்றும் மருத்துவச் சிகிச்சை வினியோக சங்கிலியின் சர்வதேச புழக்கத்தைச் சீர்குலைக்கும் என்று தெரிவித்தார்.

தற்போது, அமெரிக்காவின் சில அரசியல்வாதிகள், பொது விதியையும் ஒழுக்க நெறியையும் மீறிய முன்மொழிவுகளை டிரம்ப் அரசுக்கு வழங்கி, சர்வதேச நோய் தடுப்பு ஒத்துழைப்பை சீர்குலைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com