கரோனா வைரஸ்
கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் பாதிப்பு: உலக அளவில் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது

கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின்  எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது.

புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின்  எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 843 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17  பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் பலியானவர்களின்  எண்ணிக்கை 25 ஆயிரத்தை தொட்டது.

இந்திய நேரப்படி இரவு எட்டு மணி அளவில் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,53,244   ஆகும்.

அதேபோல பலியானவர்களின் எண்ணிக்கையில் 8,215 பேருடன் இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 4,858 பேரும், சீனாவில் 3,174  பேரும் மரணமடைந்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com