உலக அளவில் கரோனா பாதிப்பு 6 லட்சத்தை எட்டியது; ஒரே வாரத்தில் இருமடங்கு

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
dsc_4163_copy__01_2703chn_126_3
dsc_4163_copy__01_2703chn_126_3

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.

சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட கரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதுவரை 6,00,835 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பலனின்றி 27,400 பேர் பலியாகியுள்ளனர். ஒரே வாரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கரோனா பாதித்தவர்களில் சிகிச்சை பெற்று 1,33,426 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சிகிச்சை அளிப்போருக்கும், சிகிச்சை பெற்று வருவோருக்கும் நம்பிக்கையூட்டும் விஷயமாகவே உள்ளது.

ஆறு லட்சத்தில் 1,04,256 கரோனா நோயாளிகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கரோனாவின் தாயகமான சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவும் இத்தாலியும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் முதல் இரண்டு இடங்களையும் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரை கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உள்ளது. இத்தாலியில் கரோனா பாதிப்பு 86,498 ஆகவும், உயிரிழப்பு 9,134 ஆகவும் உள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 800 தாண்டிவிட்டது. பலி எண்ணிக்கை 20 ஆக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com