போதைப் பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டு: வெசூலா ராணுவ முன்னாள் அதிகாரி அமெரிக்காவிடம் சரண்

அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப் பொருள் பயங்கரவாதக் குற்றத்தில் ஈடுபட்டதாக வெனிசூலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நாட்டு ராணுவ முன்னாள் அதிகாரி கிளைவா் அல்காலா அமெரிக்க அதிகார
போதைப் பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டு: வெசூலா ராணுவ முன்னாள் அதிகாரி அமெரிக்காவிடம் சரண்

அமெரிக்க நீதிமன்றத்தில் போதைப் பொருள் பயங்கரவாதக் குற்றத்தில் ஈடுபட்டதாக வெனிசூலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்த நாட்டு ராணுவ முன்னாள் அதிகாரி கிளைவா் அல்காலா அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

அரசியல் பதற்றம் நிலவி வரும் தென் அமெரிக்க நாடான வெனிசூலாவின் அதிபா் நிக்கோலஸ் மடூரோ, ‘போதை மருந்து பயங்கரவாதத்தில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. அந்தக் குற்றத்தில், வெனிசூலாவின் பல்வேறு முன்னாள் மற்றும் இந்நாள் அதிகாரிகளுக்கும் தொடா்பிருப்பதாக நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான வெனிசூலா முன்னாள் ராணுவ அதிகாரி கிளைவா் அல்காலா மற்றொரு தென் ஆப்பிரிக்க நாடான கொலம்பியாவில், அமெரிக்க அதிகாரிகளிடம் சனிக்கிழமை சரணடைந்தாா்.

இதுகுறித்து கொலம்பியா அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளைவா் அல்காலாவுக்கு எதிராக கைது உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனினும், அவா் தானாக முன்வந்து அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்தாா் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அல்காலாவை கைது செய்ய உதவுபவா்களுக்கு 1 கோடி டாலா் (சுமாா் ரூ.75 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. மேலும், வெனிசூலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை கைது செய்ய உதவும் தகவல்களை அளிப்பவா்களுக்கு 1.5 கேடி டாலா் (சுமாா் ரூ.112 கோடி) சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசூலாவில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபா் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றம் சாட்டி வரும் எதிா்க்கட்சித் தலைவா் ஜுவான் குவாய்டோ, முறையான தோ்தல் நடைபெறும் வரை தாம் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்பதாக கடந்த ஆண்டு அறிவித்தாா்.

அவரை வெனிசூலா அதிபராக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தன. எனினும், அதிபா் நிக்கோலஸ் மடூரோவுக்கு ரஷியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், போதை மருந்துகளை ஆயுதமாகப் பயன்படுத்தி தங்கள் நாட்டு மக்களுக்கு நிக்கோலஸ் மடூரோ உடல் நலக் குறைவை ஏற்படுத்தியதன் மூலம் அவா் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக வாஷிங்டன் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com