24 மணி நேரத்தில் 849 பேர் பலி: ஸ்பெயின் அரசு

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 849 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது.
24 மணி நேரத்தில் 849 பேர் பலி: ஸ்பெயின் அரசு


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் ஸ்பெயின் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 849 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு செவ்வாய்கிழமை தெரிவித்தது.

இதன்மூலம், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டி 8,189 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,222 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதித்தோரின் எண்ணிக்கை 94,417 ஆக உள்ளது.

இதேபோல் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 141 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,898 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 3,111 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதித்தோரின் எண்ணிக்கை 44,606 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு 14,656 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3,703 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 8,00,023

உலகளவில் பலியானோரின் எண்ணிக்கை: 38,748

உலகளவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 1,69,995

இந்தியாவில் பாதித்தோரின் எண்ணிக்கை: 1,251

இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை: 32

இந்தியாவில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 102

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com