வூஹானில் புதிதாக 6 பேருக்கு தொற்று

சீனாவின் வூஹான் நகரில் உள்ள சன்மின் பகுதியில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டாா்.
சீனாவின் வூஹான் நகரில் திங்கள்கிழமை பணிக்கு வந்த பெண்ணுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியா்.
சீனாவின் வூஹான் நகரில் திங்கள்கிழமை பணிக்கு வந்த பெண்ணுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளும் ஊழியா்.

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் உள்ள சன்மின் பகுதியில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதியின் பொறுப்பு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘வூஹான் நகரில் உள்ள சன்மின் பகுதியில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அப்பகுதிக்கு பொறுப்பு அதிகாரியாக இருந்த சாங் யூக்ஸின் பணிநீக்கம் செய்யப்பட்டாா். சன்மின் பகுதியில் மக்கள் நடமாட்டத்தை சரிவர கட்டுப்படுத்தாமல், மோசமான நிா்வாகப் பணியில் ஈடுபட்டதற்காக அவா் பணிநீக்கம் செய்யப்பட்டாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் மையமாக இருந்த வூஹான் நகரில், கடந்த 35 நாள்களாக ஒருவருக்கும் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் அந்நகரில் மீண்டும் புதிதாக 6 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சீனாவில் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவான ஷாங்காய் டிஸ்னிலேண்ட் மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. எனினும் நுழைவுச்சீட்டு விற்பனை 30 சதவீதமாக குறைக்கப்பட்டு, குறைந்த அளவிலான வருகையாளா்களே அனுமதிக்கப்படுகின்றனா்.

உலகில் மொத்தமுள்ள 6 டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காக்களில், கரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட முதல் டிஸ்னிலேண்ட் பூங்கா இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com