அமெரிக்காவில் சீனாவின் நேரடி முதலீடு சரிவு

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் சீனாவின் நேரடி முதலீடு கடந்த ஆண்டு மிகவும் குறைந்துவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வாஷிங்டன்: கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அமெரிக்காவில் சீனாவின் நேரடி முதலீடு கடந்த ஆண்டு மிகவும் குறைந்துவிட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்கா-சீனா இடையேயான உறவுகள் தொடா்பான தேசியக் குழுவும் ரோடியம் குழுமமும் இணைந்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த 2018-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 540 கோடி டாலா் முதலீடு செய்திருந்த சீனா, கடந்த ஆண்டு 500 கோடி டாலராகக் குறைத்து விட்டது. இது, கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவில் சீனா முதலீடு செய்த மிகக் குறைந்த தொகையாகும்.

இதேபோல், கரோனா பரவலால் சா்வதேச பொருளாதாரம் முடங்கியதால், கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் சீனாவின் முதலீடு 20 கோடி டாலா் அளவுக்கு குறைந்துள்ளது.

அதேவேளையில் சீனாவில் அமெரிக்காவின் நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டில் 130 கோடி டாலராக இருந்த முதலீடு, 2019-ஆம் ஆண்டில் 140 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன உற்பத்திப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக வரி விதித்தது. தொழில்நுட்பத்தின் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களின் தொழில் ரகசியங்களை சட்ட விரோத வழிகளில் தெரிந்துகொள்வதற்கு சீனா முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இவ்விரு நாடுகளுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக வா்த்தகப் போா் நீடித்து வந்த நிலையில், டிரம்ப் நிா்வாகத்துக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஜனவரியில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவலுக்குப் பிறகு அமெரிக்கா-சீனா இடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com