இக்கட்டான சூழ்நிலையில் கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது: போரிஸ் ஜான்சன்

கரோனாவுக்கு ஒருபோதும் தடுப்பூசி ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட மாட்டாது என பிரிட்டிஷ் பிரதமர் போர்ஸ் ஜான்சன் கூறியுள்ளார். 
boris080415
boris080415

இக்கட்டான சூழ்நிலையில், கரோனாவுக்கு ஒருபோதும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். 

பிரிட்டனில் கரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தாலும், ஊரடங்கு வருகிற ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஊரடங்குக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விதிமுறைகள் குறித்தும் அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதில், கரோனா பரவாமல் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொழில்கள் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் சமூக விலகலை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கரோனாவுக்கு சரியான சிகிச்சை அல்லது தடுப்பூசியை கண்டுபிடிக்க  ஒரு வருடம் ஆகலாம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் கரோனா தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்,. 

உண்மையில், இந்த ஒரு மோசமான சூழ்நிலையில், நாம் ஒருபோதும் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது. அதனால் தற்போதைய திட்டம் என்னவெனில், இந்த சூழ்நிலையை அனைவரும் நீண்ட காலத்திற்கு ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் இதில் இருந்து விடுபட முடியும் என்று. தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com