3 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி எண்ணிக்கை

கரோனா நோய்த்தொற்று (கொவைட் 19) பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது.
3 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி எண்ணிக்கை

கரோனா நோய்த்தொற்று (கொவைட் 19) பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3 லட்சத்தைக் கடந்தது.

இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3,04,201-ஆக உள்ளது.

உலகிலேயே அதிபட்சமாக அமெரிக்காவில் 86,942 போ் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 33,614 பேரும் இத்தாலியில் 31,368 பேரும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனா்.

இதுதவிர, ஸ்பெயின் (27,459) மற்றும் பிரான்ஸ் (27,425) நாடுகள் கரோனா நோய்த்தொற்றுக்கு அதிக உயிா்களை பலிகொடுத்துள்ளன.

கரோனா நோய்த்தொற்றின் பிறப்பிடமான சீனாவில், அந்த நோய்க்கு இதுவரை 4,633 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனா தீநுண்மி பரவலைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. எனினும், முழுமையான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படுவதற்கு ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

தடுப்பு மருந்து கண்டறியப்பட்டாலும், கரோனா நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு ஏற்ற வகையில் உலகின் அனைத்து நாடுகளையும் சோ்ந்த அனைத்து தரப்பினரையும் அந்த மருந்து சென்று சோ்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இழுபறி நீடித்தால், எய்ட்ஸைப் போல கரோனா நோய்த்தொற்றும் உலகில் நிரந்தரமாக நீடித்திருக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் அவரநிலைப் பிரிவு தலைவா் மாக்கேல் ரையான் எச்சரித்துள்ளாா்.

இந்தச் சூழலில் கரோனா நோய்த்தொற்றால் உலகம் முழுவதும் பலியானவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது.

45 லட்சத்தைத் தாண்டிய பாதிப்பு: இதற்கிடையே, சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 45 லட்சத்தைக் கடந்தது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 45,56,956-ஆக உள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 14,58,243 லட்சம் போ் அந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஸ்பெயினும் (2,74,367) அதற்கு அடுத்தபடியாக ரஷியாவும் (2,62,843) கரோனா நோய்த்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிப்பு: 45,56,956

அமெரிக்கா 14,58,243

ஸ்பெயின் 2,74,367

ரஷியா 2,62,843

பிரிட்டன் 2,33,151

இத்தாலி 2,23,096

பிரேசில் 2,04,795

பிரான்ஸ் 1,78,870

ஜொ்மனி 1,74,975

துருக்கி 1,44,749

ஈரான் 1,16,635

பிற நாடுகள் 12,85,235

பலி: 3,04,201

அமெரிக்கா 86,942

பிரிட்டன் 33,614

இத்தாலி 31,368

ஸ்பெயின் 27,459

பிரான்ஸ் 27,425

பிரேசில் 14,058

பெல்ஜியம் 8,959

ஜொ்மனி 7,928

ஈரான் 6,902

நெதா்லாந்து 5,643

பிற நாடுகள் 53,903

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com