உலகளவில் கரோனா பாதிப்பு 45 லட்சத்தை எட்டியது

உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 45 லட்சத்தை எட்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகளவில் கரோனா பாதிப்பு 45 லட்சத்தை எட்டியது

உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி 45 லட்சத்தை எட்டியது. பலியானோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

முதலில் சீனாவில் பாதிப்பை உண்டாக்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக உலக நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இந்த நோய்த் தொற்றால் தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,50,016 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை உலகளவில் 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 14 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 86,942 பேர் பலியாகியுள்ளனர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com