சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர்

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர், மே 22ஆம் தேதி பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது.
சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர்

சீனாவின் 13வது தேசிய மக்கள் பேரவையின் 3வது கூட்டத்தொடர், மே 22ஆம் தேதி பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது.

தற்போது, வெளிநாடுகளில் புதிய ரக கரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கரோனா வைரஸ் தொற்றால் வெளிநாடுகளில் பாதிப்புக்குள்ளானவர்கள் சீனாவுக்கு வருவது, சீனாவில் இந்நோயால் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றைச் சீனா எதிர்கொண்டு வருகின்றது.

எனவே, இவ்வாண்டின் இக்கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று சீன தேசிய மக்கள் பேரவையின் வெளிவிவகாரக் கமிட்டியின் தலைவர் ஜாங் யேசுய் செய்தியாளர்களிடம் கூறினார்.

சட்ட அடிப்படையிலான ஆட்சிமுறையிலும் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியிலும் சீனா உறுதியாக ஊன்றி நின்று வருகின்றது. திறப்பு மற்றும் வெளிப்படையின் எழுச்சியுடன், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு இக்கூட்டத்தொடர் சேவை வழங்கும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com