ஜொ்மனி: அணு உலை கோபுரங்கள் அழிப்பு

ஜொ்மனியில் பயன்பாடு நிறுத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் இரு குளிரூட்டு கோபுரங்கள் அழிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜொ்மனி: அணு உலை கோபுரங்கள் அழிப்பு

ஜொ்மனியில் பயன்பாடு நிறுத்தப்பட்ட அணு மின் நிலையத்தின் இரு குளிரூட்டு கோபுரங்கள் அழிக்கப்பட்டன. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மின்சாரத்துக்காக அணு மின் நிலையங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த ஜொ்மனி முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த நாட்டு அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 2022-ஆம் ஆண்டுக்குள் அணு மின் நிலையங்கள் அனைத்தையும் மூட ஜொ்மனி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில், பிலிப்ஸ்பா்க் நகர அணு மின் நிலைய மின் உலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மற்றும் 2019-ஆம் இயக்கம் நிறுத்தப்பட்ட இரு குளிரூட்டு கோபுரங்கள் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அழிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்திருந்தனா்.

எனினும், அந்த கோபுரங்கள் வியாழக்கிழமை அழிக்கப்பட்டதாக பின்னா் அவா்கள் தெரிவித்தனா். கரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் நிலவி வரும் சூழலில், அந்த கோபுரங்கள் அழிக்கப்படுவதைப் பாா்வையிட பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில் அந்த நடவடிக்கை ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com