உலகக் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சீனா ஆற்றியுள்ள பங்குகள்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் மனித குலத்தின் பொது புவியையும் ஒன்றாக இணைந்து பாதுகாக்க வேண்டும்.
உலகக் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சீனா ஆற்றியுள்ள பங்குகள்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் மனித குலத்தின் பொது புவியையும் ஒன்றாக இணைந்து பாதுகாக்க வேண்டும்.

மனித குலப் பொது சுகாதாரச் சமூகத்தைக் கூட்டாக உருவாக்க வேண்டும் என்று 73ஆவது உலகச் சுகாதார மாநாட்டின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் காணொளி மூலம் பேசிய போது தெரிவித்தார். புதிய ரக கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சீனா மேற்கொண்டுள்ள அனுபவங்களை இம்மாநாட்டில் ஷிச்சின்பிங் பகிர்ந்து கொண்டார்.

வைரஸ் தடுப்புப் பணியை வலுப்படுத்துவதற்கு ஆறு முன்மொழிவுகளை முன்வைத்த அவர், உலக நாடுகளுடன் இணைந்து வைரஸ் தடுப்புப் பணியைக் கூட்டாக முன்னேற்றும் ஐந்து நடவடிக்கைகளையும் அறிவித்தார். அவை உலக நாடுகளில் வைரஸ் தடுப்பின் மீதான நம்பிக்கையை உயர்த்துவது உறுதி.

ஷிச்சின்பிங்கின் உரை அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது என்று 72ஆவது உலகச் சுகாதார மாநாட்டின் தலைவரும் லாவோஸ் சுகாதார அமைச்சருமான பவுன்கோங் சிஹாவோங் இம்மாநாட்டில் தெரிவித்தார். “தவறுகளை காட்டும் அமெரிக்கா, தடுப்பூசிக்கு நம்பிக்கை கொண்டுவரும் ஷிச்சின்பிங்” என்று அமெரிக்காவின் பொலிடிகோ செய்தி ஊடகம் தனது விமர்சனக் கட்டுரை ஒன்றுக்கு தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com