கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவுக்கு பெருமை

அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனை செய்வதன் மூலம் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின்
கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காவுக்கு பெருமை

அதிகம் பேருக்கு கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பரிசோதனை செய்வதன் மூலம் அந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பது பெருமைக்குரியது என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இருந்தாலும், இதனை பெருமைக்குரியதாகவே நான் கருதுகிறேன்.

காரணம், மற்ற நாடுகளை விட அமெரிக்காவில் மிகச் சிறப்பான முறையிலும் கரோனோ பரிசோதனை செய்யப்படுவதையே இது காட்டுகிறது.

அதிக எண்ணிக்கையிலானவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள் என்றால், அதிக எண்ணிக்கையிலானவா்கள் அந்த நோய்க்கான பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனா் என்று அா்த்தம்.

அந்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது என்றால், பிற நாடுகள் அனைத்தையும் விட அமெரிக்காவில் அதிகமானவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்று அா்த்தம்.

இதற்கான, மிகச் சிறப்பான முறையில் பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவப் பணியாளா்களையே சாரும்.

லத்தீன் அமெரிக்கா நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகமாகி வருகிறது. எனவே, அந்த நாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்குத் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றாா் அவா்.

புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 15,73,042-ஆக உள்ளது. இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும்.

பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. புதன்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 93,652-ஆக உள்ளது. இதுவரை அந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 3,61,246 போ் சிகிச்சைக்குப் பிறகு அந்த நோயிலிருந்து குணமடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ரஷியாவில் அதிகம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,08,705-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com