ரஷியாவில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது! பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. 
ரஷியாவில் கரோனா பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது! பலி 3 ஆயிரத்தை நெருங்குகிறது

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. 

ரஷியாவில் கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு கரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் அதிகமாக  இருந்துவந்த நிலையில் கடந்த சில தினங்களாக 10 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. எனினும், உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்காவைத் தொடர்ந்து, ரஷியா 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,764 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 3,08,705 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 135 பேர் பலியாகியுள்ளனர். இதனால் ரஷியாவில் இதுவரை கரோனாவுக்கு 2, 972 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் நேற்று 5,921 பேர் உள்பட இதுவரை 85 ஆயிரம் பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com