பொருளாதார சரிவில் இருந்து நாட்டைக் காக்கும் சீனா!

கரோனா வைரஸ் தொற்று நிகழ்ந்தது முதல் இதுவரை, நிர்பந்தத்தைச் மாளிக்கும் ஆற்றலையும் சுயமாக சரியாகும் திறனையும் சீனப் பொருளாதாரம் வெளிப்படுத்தியுள்ளது.
பொருளாதார சரிவில் இருந்து நாட்டைக் காக்கும் சீனா!

கரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது முதல் இதுவரை, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றலையும், பொருளாதார நெருக்கடியை சுயமாக சமாளிக்கும் திறனையும் சீன கொண்டுள்ளது.

குறிப்பாக, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியான பொருளாதாரக் குறியீடுகள் சீனாவின் பொருளாதாரம் விரைவாக மீட்சி அடைந்து வருவதைக் எடுத்துக்காட்டுகின்றன. 

ஏப்ரல் மாதத்தில் சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் இருந்ததை விட 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஏற்றுமதித் தொகை கடந்த ஆண்டில் இருந்ததை விட 8.2 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

தொழில் அடிப்படை, சூழலுக்கு ஏற்றவாறு வளைந்துகொண்டுக்கும் ஆற்றல், மனித வளம் முதலியவை சீனாவின் மேம்பாடுகளாகும். தவிரவும், சீரான சரக்கு புழக்க அமைப்புமுறை மற்றும் தடையில்லா போக்குவரத்து வசதிகளும், பொருளாதாரத்தின் இடைக்கால மற்றும் நீண்ட கால வளர்ச்சிக்குத் துணை புரிகின்றது.

எனவே சீனச் சந்தை மீது அந்நிய நாட்டவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை சற்றும் குறையவில்லை. எடுத்துக்காட்டாக, தற்போது சீனாவுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் வணிக விமான போக்குவரத்து நெறியைத் துவக்க இரு நாட்டு அரசுகளும் விவாதித்து வருகின்றன. ஜெர்மனியுடன் முழுமையான தொழில் சங்கிலியை உருவாக்கவும், நிதானத்தைப் பேணிக்காக்கவும் சீனா விரும்புவதாக சீனத் துணை வெளியுறவு அமைச்சர் லே யேட்சங் தெரிவித்தார். மேலும், கள ஆய்வுகளின் படி 40 விழுக்காட்டு வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவுக்கான முதலீட்டுத் தொகையைத் தொடர்ந்து அதிகரிக்க விருப்பம்  தெரிவித்துள்ளதாக சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கடந்த பல ஆண்டுகளாக உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா 30 விழுக்காட்டுக்கு மேல் பங்களித்துள்ளது. இன்றைய இக்கட்டான சூழலில் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா வெற்றிகரமாக மீண்டு வந்துள்ளதோடு, பொருளாதார சரிவில் இருந்தும் நாட்டை காத்து,  உலகப் பொருளாதார மேம்பாட்டுக்கும் உறுதியான ஆதரவளித்து வருகிறது. . 

பெய்ஜிங்கில் தற்போது நடைபெற்று வரும் இரு கூட்டத்தொடர்களில் சீரான பொருளாதார வளர்ச்சிக்கு உகந்த  முன்மொழிவுகள் வழங்கப்படும் என எதிர்பர்க்கப்படுகிறது. 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com