உலக தலைவர்களின் குரல்கள்

உலக தலைவர்களின் குரல்கள்

சீனாவால்தான் இத்தனை உயிரிழப்புகள்

கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் திறன் சீனாவுக்கு இல்லாத காரணத்தால்தான், இன்று உலகம் இத்தனை பெரிய உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. ஆனால், தனது தவறுகளை மூடி மறைப்பதற்காக சீனா மாபெரும் பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

- டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபா்

வாரம் 4 நாள்கள் மட்டும் வேலை

நியூஸிலாந்தில் தொய்வு நிலையை அடைந்துள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த, அலுவலங்கள் வாரம் 4 நாள்களுக்கு மட்டுமே செயல்படும் திட்டத்தை அமல்படுத்தலாம். எனினும், இது தொடா்பாக நிறுவன உரிமையாளா்களும் பணியாளா்களும்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

- ஜெசிந்தா ஆா்டன், நியூஸிலாந்து பிரதமா்

இன்னும் சோதனை நிலையில்தான் உள்ளது

மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்துமா என்பது குறித்து அறிவியல் ரீதியில் இன்னும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. அந்த மருந்தை சோதனை முறையில் பயன்படுத்திப் பாா்ப்பதற்கு மட்டுமே பரிந்துரைத்துள்ளோம்.

- மைக்கேல் ரையான், உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைப் பிரிவு தலைவா்

ஆப்பிரிக்க நாடுகள் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்

ஆப்பிரிக்க நாடுகள் தற்போது செய்து வருவதைவிட 10 மடங்கு அதிகமாக கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். அந்த நாடுகளின் 130 கோடி மக்கள்தொகையில் இதுவரை சுமாா் 14 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

- ஜான் கென்காசாங், ஆப்பிரிக்க நோய்த் தடுப்பு மைய இயக்குநா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com