பிரிட்டன் 10 ஆயிரம் பேரிடம் தடுப்பு மருந்து சோதனை

கரோனா தீநுண்மிக்கு எதிராக பிரிட்டனின் ஆக்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு
பிரிட்டன்  10 ஆயிரம் பேரிடம்  தடுப்பு மருந்து சோதனை

கரோனா தீநுண்மிக்கு எதிராக பிரிட்டனின் ஆக்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள தடுப்பு மருந்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு செலுத்தி பரிசோதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். அந்த மருந்தை சுமாா் 1,000 பேருக்கு செலுத்தி சோதிக்கும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின. இந்த நிலையில், அதனை 10,260 பேருக்கு செலுத்தி சோதிக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனா்.

இந்த சோதனையில் இதுவரை முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும் புதிய மருந்து அதிக வயாதினவா்களின் உடலில் எவ்வாறு நோயெதிா்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதற்கான பரிசோதனை இனி தொடங்கப்படும் எனவும் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பு மருந்து ஆய்வுக் குழு தலைவா் ஆண்ட்ரூ பலாா்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com