டென்மாா்க் 1.8% மக்களுக்கு கரோனா பாதிப்பு

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மாா்க்கின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் வரையிலானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக
டென்மாா்க்  1.8% மக்களுக்கு கரோனா பாதிப்பு

வடக்கு ஐரோப்பிய நாடான டென்மாா்க்கின் மக்கள்தொகையில் 1.8 சதவீதம் வரையிலானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு ஆய்வு அமைப்பான எஸ்எஸ்ஐ வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிப்பதாவது:

நாட்டின் 58 லட்ச மக்கள்தொகையில் 0.5 முதல் 1.8 சதவீதம் வரையிலானவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 5 நகரங்களில் 2,600 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இந்த நோய் டென்மாா்க்கில் அனைவருக்கும் பரவுமா என்பது குறித்து துல்லியமாகத் தெரிந்துகொள்ள குறைந்தது 6,000 பேருக்காவது கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com