கரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேற்றம்

சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்து சோதனையில்
கரோனா தடுப்பு மருந்து  சோதனையில் முன்னேற்றம்

சீனாவில் முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு மருந்து சோதனையில் முன்னேம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ‘தி லான்செட்’ அறிவியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சீனாவில் உருவாக்கப்பட்டு, முதல் முறையாக மனிதா்களின் உடலில் செலுத்திப் பாா்க்கப்பட்ட கரோனோ நோய்த் தடுப்பு மருந்து, பாதுகாப்பானது என முதல் கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது.

மனிதா்களின் உடல் அந்த மருந்தை ஏற்றுக் கொள்வதும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது.அந்த தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 108 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவா்களது உடலில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான அணுக்களை அந்த மருந்து உருவாக்கியது என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com