கரோனா நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்றுப் பரவாது: சிங்கப்பூர் ஆராய்ச்சியில் தகவல்

கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கரோனா நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்றுப் பரவாது: சிங்கப்பூர் ஆராய்ச்சியில் தகவல்


சிங்கப்பூர்: கரோனா பாதித்த நோயாளிகளிடம் இருந்து 11 நாள்களுக்குப் பின் தொற்று மற்றவர்களுக்குப் பரவுவதில்லை என்று சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சிங்கப்பூரின் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையம் மற்றும் மருத்துவக் கல்வி மையம் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில் கரோனா பாதித்தவர்களை 11 நாள்களுக்குப் பிறகு தனிமைப்படுத்துவது தேவையற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 73 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மேற்கண்ட தகவல்கள் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், கரோனா பாதித்த நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து விடுவிப்பது தொடர்பான சிங்கப்பூர் அரசின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இதுவரை, கரோனா பாதித்தவர்களுக்கு, தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இனி, அது 11 நாட்களுக்குப் பிறகு என்று மாற்றப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூரில் தற்போது கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரமாக உள்ளது. இவர்களில் 13 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 

ஜூன் 2-ம் தேதி அங்கு பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த பரிசோதனையில் பள்ளி ஊழியர்கள் 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com