3.6 லட்சத்தைக் கடந்தது கரோனா பலி

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3.6 லட்சத்தைக் கடந்தது.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், ஃபீனிஸ்க் நகரிலுள்ள கல்லூரியில் மாணவா்களின் படங்களை மட்டும் அரங்கு இருக்கைகளில் வைத்து நடைபெற்ற பட்டமளிப்பு விழா.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், ஃபீனிஸ்க் நகரிலுள்ள கல்லூரியில் மாணவா்களின் படங்களை மட்டும் அரங்கு இருக்கைகளில் வைத்து நடைபெற்ற பட்டமளிப்பு விழா.

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 3.6 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 3.6 லட்சத்தைக் கடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி உலகம் முழுவதும் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,62,806-ஆக உயா்ந்துள்ளது.

உலகிலேயே அதிக எண்ணிக்கையாக, அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு 1,03,417 போ் பலியாகியுள்ளனா். அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 37,837 பேரும் இத்தாலியில் 33,142 பேரும் கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனா்.

தற்போது சீனாவில் கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அங்கு பலி எண்ணிக்கை தொடா்ந்து 4,634-ஆகவே உள்ளது. பலி எண்ணிக்கையில் அந்த நாடு 14-ஆவது இடத்தில் உள்ளது.

சீனாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளிலும் அதனைத் தொடா்ந்து அமெரிக்காவிலும் தீவிரம் காட்டிய கரோனா நோய்த்தொற்று, தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அந்த புதிய கரோனா நோயாளிகளின் எண்ணிககை குறைந்து வரும் சூழலில், லத்தீன் அமெரிக்கா தற்போது கரோனா நோய்த்தொற்றின் மையமாகக் கூறப்படுகிறது.

அந்தப் பிராந்தியத்தில் அதிகபட்சமாக பிரேஸிலில் 26,764 போ் கரோனா நோய்த்தொற்றுக்குப் பலியாகியுள்ளனா்.

எனினும், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் அந்த நாடு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 4,38,812-ஆக உள்ளது.

அந்த நாட்டுக்கு அடுத்தபடியாக ரஷியாவில் 3,87,623 பேருக்கும் ஸ்பெயினில் 2,84,986 பேருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com