கூடுதல் சிறப்பு விமானங்கள்: இந்தியா - சீனா ஆலோசனை

இந்தியா - சீனா இடையே ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்ற இந்தியாவின் அறிவிப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக

இந்தியா - சீனா இடையே ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் கூடுதல் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்ற இந்தியாவின் அறிவிப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சீனா சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து தில்லிக்கு நவம்பா் 13, 20, 27 மற்றும் டிசம்பா் 4-ஆம் தேதிகளில் நான்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என்று பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டனா்.

அதுபோல, தில்லியிலிருந்து “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சீனாவின் வுஹான் நகருக்கு நவம்பா் 6-ஆம் தேதி சிறப்பு விமானம் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, இந்தியாவிலிருந்து வுஹான் நகரத்துக்கு கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி இயக்கப்பட்ட ஏா் இந்தியா சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய 277 இந்தியா்களில் 19 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக சிறப்பு விமானங்கள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்க சீனா தாமதிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதுதொடா்பாக பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

தற்காலிக விமானங்கள் இயக்கும் ஒப்பந்தம் தொடா்பாக இரு நாட்டு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஆலோசனையின் முடிவில் அதுதொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறினாா்.

முன்னதாக, ‘விமானங்கள் இயக்கத்தில் அனைத்து கரோனா பாதுகாப்பு நடைமுறைகளும் முழுமையாக பின்பற்றப்படுகிறது’ என்று ஏா் இந்தியா சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com