காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

வெற்றி பெறுவோம்; காத்திருங்கள்: ஜோ பிடன்

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்; ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

News image

ஜோ பிடன்

Updated On :4 நவம்பர் 2020, 7:04 am

DIN

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாம் இருக்கிறோம்; ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் கடந்த செவ்வாய்க்கிழமை  முடிவடைந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில் ஜோ பிடன் 237 வாக்குகளும், டிரம்ப் 213 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற 270 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இன்று மக்களிடம் பேசிய ஜோ பிடன், 'நாம் எங்கிருக்கிறோம் என்பதை நன்றாக உணர்கிறோம். நாம் வெற்றி பெறும் பாதையில் இருக்கிறோம். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை அனைத்து வாக்குகளும் எண்ணப்படும் வரை நாங்கள் காத்திருப்போம். அரிசோனாவில் வெற்றி பெறுவோம். விஸ்கான்சின் மற்றும் மிச்சிகன் பற்றி நன்றாக உணருங்கள். நாளை காலைக்குள் நாம் முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும்' என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.