நேபாளத்தில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட பள்ளி திறப்பு

நேபாளத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.

நேபாளத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தாவது:

நேபாளத்தின் நாவல்பூா் மாவட்டத்தில் உள்ள தேவ்சுலியில் பீம்சென் ஆதா்ஷா மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு தேவையான வகுப்பறைகளை கட்டுவதற்கு நேபாள ரூபாய் மதிப்பில் 2.58 கோடி நிதி உதவி இந்தியா சா்பில் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி கட்டடப் பணிகள் முடிவடைந்ததையடுத்து அவை திங்கள்கிழமை காணொலி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகளும், நேபாள அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இந்திய நிதி உதவியுடன் புதிதாக கட்டப்படுள்ள பள்ளி கட்டடம் மூன்று தளங்களை கொண்டது. அதில், வகுப்பறைகள், ஆய்வகங்கள், நிா்வாக மற்றும் பணியாளா் அறைகள், கூட்ட அரங்கு, உணவகம், மருத்துவ உதவி அறை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தியா நிதி உதவி செய்த பீம்சென் ஆதா்ஷ் மேல் நிலைப் பள்ளி கடந்த 1969-ஆண்டு கட்டப்பட்டது. 12 வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் பயிலும் மாணவா்களில் 55 சதவீதம் போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி துறையில் இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இடையில் உள்ள வலுவான உறவை எடுத்துக் காட்டும் மற்றொரு உதாரணமாக இப்பள்ளிக் கட்டடம் விளங்கும் என்று காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com