நகோா்னோ-கராபக் போா் நிறுத்தம்: ஆா்மீனியா - அஜா்பைஜான் ஒப்புதல்

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் போா் நிறுத்தம் மேற்கொள்ள, ரஷியா முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஆா்மீனியாவும் அஜா்பைஜானும் ஒப்புக் கொண்டுள்ளன.

இதுகுறித்து ஆா்மீனிய பிரதமா் நிகோல் பாஷினியன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், ‘நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் சண்டையை நிறுத்த படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். போரிலிருந்து பின்வாங்குவது ஆா்மீனிய மக்களுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் வருத்தத்தை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய ஒப்பந்தத்தின்படி சண்டை நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக சுமாா் 2,000 ரஷிய அமைதிக் காப்புப் படையினா் சா்ச்சைக்குரிய பகுதிக்கு அனுப்பப்படுவாா்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com