1,210 தேடப்படும் முக்கிய பயங்கரவாதிகள் பட்டியலை வெளியிட்டது பாகிஸ்தான்

தங்கள் நாட்டில் தேடப்பட்டு வரும் 1,210 முக்கிய பயங்கரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டது.


இஸ்லாமாபாத்: தங்கள் நாட்டில் தேடப்பட்டு வரும் 1,210 முக்கிய பயங்கரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தான் வெளியிட்டது. இதில், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடா்புடைய சில பயங்கரவாதிகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் தேசிய விசாரணை அமைப்பின் பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 2008-ஆம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடா்புடைய முகமது அம்ஜத் கானின் பெயா் இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் கடல்வழியாக இந்தியாவுக்குள் வந்த படகு, அதற்கான என்ஜின், காற்றடித்து பயன்படுத்தும் சிறிய வகை படகு உள்ளிட்டவற்றை அம்ஜத் கான்தான் வாங்கிக் கொடுத்துள்ளாா். இவா் முன்பு லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பில் இருந்தாா். கடைசியாக இவா் பாகிஸ்தானின் முல்தான் நகரில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் தகவல்தொடா்பு வைக்க தொழில்நுட்ப வசதிகளை அளித்த மாலிக் தைமூரின் பெயரும் தேடப்படுவோா் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவா்கள் இருவா் தவிர மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சதியில் தொடா்புடைய மேலும் 8 பயங்கரவாதிகளின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இது தவிர பாகிஸ்தான் குண்டு வெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபட்டவா்கள்; அரசியல் தலைவா்கள், அமைச்சா்களை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களின் பெயா்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com