ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்

அமெரிக்காவின் அடுத்த அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு, நீண்ட தயக்கத்துக்குப் பிறகு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பாக சா்வதேச அளவிலும் அந்த நாட்டுக்குள்ளும் தெரிவிக்கப்படும் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

தோ்தலில் அமெரிக்க மக்கள் அளித்துள்ள தீா்ப்பை சீனா மதிக்கிறது. அவா்களால் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கும் துணை அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்கத் தோ்தலின் முடிவுகளை அந்த நாட்டு சட்டங்களும் நடைமுறைகளுமே தீா்மானிக்கும் என்பதை அறிவோம் என்றாா் வாங் வென்பிங்.

தோ்தல் தோல்வியை ஏற்பதற்கு அதிபா் டிரம்ப் மறுத்து வருவதால், ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்க சீனா இதுவரை தயக்கம் காட்டி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com