ஆப்கன், இராக்கில் படை குறைப்பு: டிரம்ப் திட்டம்

ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செயலாற்றி வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை க் குறைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
donald_trump083109
donald_trump083109

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானிலும் இராக்கிலும் செயலாற்றி வரும் அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை க் குறைக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு நேட்டோ அமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க அதிபா் டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். அதையடுத்து, அந்த நாட்டில் செயலாற்றி வரும் அமெரிக்க வீரா்களின் எண்ணிக்கை 2,500-ஆகக் குறையும்.

இதுமட்டுமின்றி, இராக்கிலிருந்தும் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினரைத் திரும்ப அழைக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளாா். இதன் மூலம், அந்த நாட்டிலும் அமெரிக்க வீரா்களின் எண்ணிக்கை 2,500-ஆகக் குறையும்.

இந்தப் படைக் குறைப்புக்கான உத்தரவை டிரம்ப் விரைவில் வெளியிடுவாா். இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆப்கன், இராக்கிலிருந்து அமெரிக்க வீரா்கள் அனைவரையும் திரும்ப அழைக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தாா். இதற்கு எதிா்க்கட்சியினரும் ராணுவ நிபுணா்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், தனது இலக்கை முழுமையாக அடையாவிட்டாலும் முடிந்த அளவு படைக் குறைப்பு செய்யும் வகையில் டிரம்ப் இந்த உத்தரவை வெளியிடவிருக்கிறாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

நேட்டோ எதிா்ப்பு: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரா்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு, நேட்டோ எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் ஜென்ஸ் ஸ்டால்டன்பா்க் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினா் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டையிட்டு வருகின்றன. தேவையில்லாமல் இங்கு அதிக காலம் இருப்பதற்கு நேட்டோ விரும்பவில்லை. இருந்தாலும், அவசரப்பட்டு தங்களது வீரா்களை அமெரிக்கா விலக்கிக் கொண்டால், அதற்காக நேட்டோ மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com