‘டிரம்பின் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை’: முன்னாள் தேர்தல் பாதுகாப்புத் தலைவர்

அமெரிக்க அதிபர் தேர்தலைக் குறித்த டிரம்பின் வாக்கு மோசடிக் குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை என அமெரிக்க முன்னாள் தேர்தல் பாதுகாப்புத் தலைவர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டிரம்பை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதுகுறித்து ஆரம்பம் முதலே பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க அதிபர்  டிரம்ப் தெரிவித்து வந்தார்.

வாக்கு இயந்திரங்களில் மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்த டிரம்ப், ஜோ பைடனை வெற்றி பெற வைக்க வெளிநாட்டு சக்திகள் உதவியுள்ளதாகவும் தேர்தல் அமைப்புக்கு அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப், தேர்தல் பாதுகாப்பு தலைவராக இருந்த கிறிஸ் கிரெப்ஸை பதவி நீக்கம் செய்தார். இந்நிலையில் "எனக்குத் தெரிந்த எந்தவொரு இயந்திரமும் ஒரு வெளிநாட்டு சக்தியால் கையாளப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை," என்று கிரெப்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கேலிக்குரியவை எனத் தெரிவித்த கிரெப்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com