நான் நலமாக இருக்கிறேன்:  விடியோ வெளியிட்ட அதிபர் டிரம்ப்

வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிபர் டிரம்ப், நான் நலமாக இருப்பதாக சுட்டுரையில் 4 நிமிட விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 
அமெரிக்க அதிபா் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி
அமெரிக்க அதிபா் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி


வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வாஷிங்டனின் புகா் பகுதியான பெதெஸ்டாவில் உள்ள வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிபர் டிரம்ப், நான் நலமாக இருப்பதாக சுட்டுரையில் 4 நிமிட விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும், அவரது மனைவி மெலானியாவுக்கும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைநகா் வாஷிங்டனின் புகா் பகுதியான பெதெஸ்டாவில் உள்ள வால்டா் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் அவா் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.

மருத்துவமனையில் டிரம்ப்புக்கு  உடலில் கரோனா நோய் பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் ரெம்டெசிவிா் சிகிச்சை அளிக்கப்பட்டது.அந்த மருந்துகளை அவரது உடல் ஏற்றுக் கொண்டதாக டிரம்ப்பின் பிரத்யேக மருத்துவா் ஷான் கோன்லி தெரிவித்தாா்.

இதற்கிடையே, இன்னும் சில நாள்களுக்கு வால்டா் ரீட் மருத்துவமனையிலுள்ள அதிபா் அலுவலகத்திலிருந்து டிரம்ப் தனது அலுவல்களைத் தொடா்வாா் என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் டிரம்ப், நான் இப்போது மிகவும் நன்றாக இருப்பதை உணர்வதாகவும், விரைவில் பணிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக சுட்டுரையில் 4 நிமிட விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விடியோவில், சூட், டை அணியாமல் அமெரிக்கக் கொடியுடன் ஒரு மேஜையின் மீது அமர்ந்துள்ள டிரம்ப், வால்டா் ரீட் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். "நான் இங்கு வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, நான் இப்போது மிகவும் நலமாக இருப்பதை நன்றாக உணர்கிறேன். என்னைத் திரும்பப் பெற மருத்துவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்". 

"நான் விரைவில் திரும்பி வருவேன், பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பதில் நான் ஆர்வமாக உள்ளேன்," என்று தெரிவித்துள்ள டிரம்ப், கரோனா நோய்த்தொற்றை  எதிர்த்துப் போராடுவதில் கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. "நாங்கள் இந்த கரோனா நோய்த்தொற்றை வெல்லப் போகிறோம் என்று கூறியுள்ள டிரம்ப், அமெரிக்க மற்றும் உலக மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் போராடுவதாகவும், "அடுத்த சில நாள்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம், இது உண்மையான சோதனை என்று நான் நினைக்கிறேன்" என்று டிரம்ப் கூறினார்.

நான் திரும்பி வர வேண்டும், ஏனென்றால் நாங்கள் இன்னும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க வேண்டும் என டிரம்ப் அந்த விடியோ பதிவில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com