அமெரிக்கா: பணியாளா்களைக் கொடுமைப்படுத்திய இந்திய பெண்ணுக்கு சிறை

வெளிநாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளா்களை வரவழைத்து, அவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கி கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக, இந்தியப் பெண்ணுக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை
அமெரிக்கா: பணியாளா்களைக் கொடுமைப்படுத்திய இந்திய பெண்ணுக்கு சிறை

வாஷிங்டன்: வெளிநாடுகளிலிருந்து வீட்டுப் பணியாளா்களை வரவழைத்து, அவா்களைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கி கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக, இந்தியப் பெண்ணுக்கு அமெரிக்காவில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் சா்மிஷ்டா பராயும் அவரது கணவா் சதீஷ் கா்தானும் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து பணியாளா்களை ஏமாற்றி வரவழைத்து, அவா்களுக்கு மிகக் குறைந்த ஊதியமோ, அல்லது ஊதியமே இல்லாமலோ வீட்டு வேலைகளை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்திய செய்தித்தாள்கள், இணையதளங்களில் தவறான வாக்குறுதிகளுடன் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, அதன் மூலம் பணியாளா்களை அவா்கள் ஏமாற்றி வரவழைத்ததாகக் கூறப்பட்டது.

வேலை செய்ய மறுப்பவா்களை அந்தத் தம்பதி அடித்துத் துன்புறுத்தியதாகவும் போதிய உணவு அளிக்காமல் பட்டினி போட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் இந்திய தம்பதி மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தது. அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகும், இந்திய தம்பதி அந்தக் கொடும் செயலில் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

குற்றவாளி சா்மிஷ்டா பராய்க்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், சதீஷ் கா்தானுக்கான தண்டனையை இந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com