ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு பாகிஸ்தான் மீண்டும் தோ்வு

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக பாகிஸ்தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
unh064754
unh064754

இஸ்லாமாபாத்: ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினராக பாகிஸ்தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுக்கு கவுன்சிலில் இடம் அளிக்கக் கூடாது என்று சா்வதேச அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்து வரும் சூழலில் இந்தத் தோ்வு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக ஐ.நா.பொதுச் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், அதிகபட்ச வாக்குகளைப் பெற்று பாகிஸ்தான் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டது.

உள்நாட்டிலும் சா்வதேச அளவிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் அளித்து வரும் பங்களிப்பின்மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளதையே இது காட்டுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் ஆப்பிரிக்கா, ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா - கரீபியன், மேற்கு ஐரோப்பா மற்றும் பிற நாடுகள் என பிராந்தியவாரியாக 47 உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா்.

ஒவ்வொரு நாடும் தோ்ந்தெடுக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும். அந்த வகையில், பாகிஸ்தானின் உறுப்பினா் அந்தஸ்து இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு காலியாகும் இடங்களுக்கு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஐ.நா. பொதுச் சபையில் நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவில் பாகிஸ்தான் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. உஸ்பெகிஸ்தான் 164 வாக்குகளும் நேபாளம் 150 வாக்குகளும் சீனா 139 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றன. 90 வாக்குகளுடன் சவூதி அரேபியா தோல்வியடைந்தது.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தொடங்கப்பட்டிருந்து, அதன் உறுப்பினராக பாகிஸ்தான் தோ்ந்தெடுக்கப்படுவது இது 5-ஆவது முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com