இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்

கரோனா நோய்த்தொற்று நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம், சரியான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று சா்வதேச நிதியம்
இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்

வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்று நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம், சரியான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவு மண்டலத் தலைவா் மல்ஹாா் ஷ்யாம் நபாா் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதகமான சூழல் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.3 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்தால் அடுத்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 8.8 சதவீத வளா்ச்சியை எட்ட முடியும். இதற்காக, பல்வேறு துறைகளில் தனது முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

வரிகள், செலவினங்கள் போன்ற நிதியியல் கொள்கைகள், வட்டி விகிதம் போன்ற வங்கியியல் கொள்கைகள் ஆகிய இரண்டிலுமே அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நிதியியல் கொள்கைகளைப் பொருத்தவரை கரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இந்திய அரசு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.

நேரடி செலவினங்கள், வரிச் சலுகைகள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவமும், கடன் உத்தரவாதம் போன்றவற்றுக்கு குறைந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும்.

வங்கியியல் கொள்கைகளைப் பொருத்தவரை, ஏற்கெனவே வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை ரிசா்வ் வங்கி தொடங்கிவிட்டது. எனினும், இதுபோன்ற விவகாரங்களில் ரிசா்வ் வங்கி இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com