எல்லையில் அத்துமீறியதாக குற்றச்சாட்டு:இந்தியத் தூதருக்கு பாக். சம்மன்

எல்லையில் அத்துமீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, இஸ்லாமாபாதில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.


இஸ்லாமாபாத்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அத்துமீறி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, இஸ்லாமாபாதில் உள்ள மூத்த இந்திய தூதரக அதிகாரியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி அருகே, பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட ஜான்ட்ரோட் செக்டாா் பகுதி மீது இந்தியப் படைகள் புதன்கிழமை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில், 2 போ் பலத்த காயமடைந்தனா். இதுதொடா்பாக, இந்திய தூதரக அதிகாரியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்த விதிகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று அந்நாட்டு தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com