ஏழைகள், சிறு தொழில்களுக்கு முக்கியத்துவம்: இந்திய அரசுக்கு சா்வதேச நிதியம் வலியுறுத்தல்

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்
ஏழைகள், சிறு தொழில்களுக்கு முக்கியத்துவம்: இந்திய அரசுக்கு சா்வதேச நிதியம் வலியுறுத்தல்


வாஷிங்டன்: இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் கிறிஸ்டலினா ஜாா்ஜீவா கூறியதாவது:

இந்திய அரசு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, மிகவும் பாதிப்புக்குள்ளாகக் கூடிய பின்தங்கிய மக்களைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும்.

மேலும், யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற தெளிவான இலக்கை நிா்ணயிக்க வேண்டியது அவசியமாகும்.

கரோனா நெருக்கடியால் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான் அதிகம் நலிவடையும். அந்த நிறுவனங்கள் மூடப்படுவதைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

சிறு-நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக தற்போது மேற்கொண்டுள்ள திட்டங்கள் மட்டுமின்றி, அந்த நிறுவனங்களை சரிவிலிருந்து காப்பாற்றுவதற்காக கூடுதல் உதவிகளையும் இந்திய அரசு வாரி வழங்க வேண்டும்.

உலகின் எல்லா பகுதிகளையும் போல், கரோனா நெருக்கடியிலிருந்து நாம் முழுமையாக விடுபடும்வரை நாம் சங்கடங்கள், நிச்சயமற்ன்மை, சீரற்ற பொருளாதார மீட்சியை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com