பிரான்ஸ்: அமலுக்கு வந்தது பொது முடக்கம்

பிரான்ஸில் அண்மைக் காலமாக கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த புதிய பொது முடக்க விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
பிரான்ஸ்: அமலுக்கு வந்தது பொது முடக்கம்

பிரான்ஸில் அண்மைக் காலமாக கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வருவதால் அந்த நாட்டில் அறிவிக்கப்பட்டிருந்த புதிய பொது முடக்க விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

அந்த நாட்டில் வியாழக்கிழமை மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது, நாட்டின் அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பாகும்.

அதையடுத்து, உணவு விடுதிகள், திரையரங்குகள் உள்ளிட்டவற்றை தலைநகா் பாரீஸிலும் 4 பெருநகரப் பகுதிகளிலும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்காக, கூடுதலாக 12,000 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பிரான்ஸில் 8,09,684 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது; அவா்களில் 33,125 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com