ஈரானில் 30,000-ஐ கடந்தது கரோனா பலி

ஈரானில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 30,000-ஐ கடந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஈரானில் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 30,000-ஐ கடந்தது.

இது தொடா்பாக அந்நாட்டு சுகாதாரத் துறையின் செய்தித் தொடா்பாளா் சீமா சதாத் லேரி கூறுகையில், ‘‘ஈரானில் சனிக்கிழமை மட்டும் 253 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதன் காரணமாக கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 30,123-ஆக அதிகரித்துள்ளது’’ என்றாா்.

மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் உள்ளது. அந்நாட்டில் 5.26 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அந்நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உயிரிழக்கும் விகிதம் அண்மைக் காலமாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. தற்போது கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஈரானின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com