உலக அளவில் கரோனா பாதிப்பு 2.61 கோடியைக் கடந்தது 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,61,83,883 கோடியாக உயர்ந்துள்ளது,
உலக அளவில் கரோனா பாதிப்பு 2.61 கோடியைக் கடந்தது 

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,61,83,883 கோடியாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் 8,67,362 ஆக அதிகரித்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: 
வியாழக்கிழமை காலை நிலவரப்படி, தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,61,83,883 கோடியாகவும், உயிரிழப்பு 8,67,362 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 1,84,47, 826 பேர் குணமடைந்துள்ளனர். 

உலக அளவில் அதிகம் கரோனா தொற்று பாதித்த நாடுகளின் வரிசையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் 62,90,737 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 35,47,032 போ் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொற்று பாதிப்புக்கு 25,53,741 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 15,101 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 1,89,964 பேர் உயிரிழந்துள்ளனர்.    

கரோனா தொற்று பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 40,01,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,23,899 உயிரிழந்துள்ளனர். 

பாதிப்பு: தொற்று பாதிப்பை பொறுத்தவரை, இந்தியா 38,53,406 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா (10,05,000), பெரு (6,63,437), தென்னாப்பிரிக்கா (6,30,595), கொலம்பியா (6,33,339), மெக்சிகோ (6,10,957), ஸ்பெயின் (4,79,554), அர்ஜென்டினா (4,39,172) ), சிலி (4,14,739), ஈரான் (3,78,752), இங்கிலாந்து (3,38,676), பிரான்ஸ் (2,93,024), சவுதி அரேபியா (3,17,486), பங்களாதேஷ் (3,17,528), பாகிஸ்தான் (2,97,014), துருக்கி (2,73,301), இத்தாலி (2,71,515), ஜெர்மனி 2,47,391 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பலி: இந்தியாவில் தொற்று பாதிப்புக்கு 67,486 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்ஸிகோ (65,816), இங்கிலாந்து (41,514), இத்தாலி (35,497), பிரான்ஸ் (30,686), ஸ்பெயின் (29,194), பெரு (29,259), ஈரான் (21,797), கொலம்பியா (20,348), ரஷ்யா (17,414), தென்னாப்பிரிக்கா (14,389), சிலி 11,344 பேர் உயிரிழந்துள்ளனர். 

சா்வதேச அளவில் கரோனா பரிசோதனை போதிய எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வெளிடப்படும் புள்ளிவிவரங்களைவிட பல மடங்கு அதிகமானவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com