உலகளவில் கரோனா பாதிப்பு 2.74 கோடியானது; பலி 8.96 லட்சம்

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.74 கோடியை எட்டியது.  இதுவரை கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 8.96 லட்சமாக உள்ளது.

உலக நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு  2,74,84,588 கோடியாக உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8,96,796 ஆக உள்ளது.  கரோனா பாதித்த 2.74 கோடி பேரில் 1.95 கோடிப் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 64,85,575 பேரும், இந்தியாவில் 42,77,584 பேரும், பிரேசிலில் 41,47,794 பேரும்,  ரஷியாவில் 10,30,690 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பை பொறுத்தவரை நாள்தோறும் பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தியா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,95,85,199 ஆக உள்ளது. தற்போது 70,02,593 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 60,225 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com