4300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் 4300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் தனது 4300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவலால் கடந்த மார்ச் மாதத்தில் உலகளாவிய அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதனால் நாடுகளுக்கிடையேயான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லிமிடெட் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com