நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரை

அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்


ஓஸ்லோ: அடுத்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரை நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு, டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த வலதுசாரி "முன்னேற்றக் கட்சி'யின் எம்.பி. கிறிஸ்டியன் டிப்ரிங்-ஜெட்டே இவ்வாறு பரிந்துரைத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லுறவு ஒப்பந்தம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தமைக்காக, டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அவர்  வலியுறுத்தியுள்ளார். எனினும், நோபல் தேர்வுக் குழு இதுதொடர்பாக கருத்து கூற மறுத்துவிட்டது.
அமைதிக்கான நோபல் பரிசுக்குரியவர்களை, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழகப் பேராசியர்கள், ஏற்கெனவே நோபல் பரிசு பெற்றவர்கள் பரிந்துரைக்கலாம்.
அந்தப் பரிசுக்கு டிரம்ப் பெயர் பரிந்துரைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com