உலக சுகாதார அமைப்புக்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்புக்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்புக்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்

கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்புக்கு சா்வதேச நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியதாவது:உலகில் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில், ஐ.நா. பிரிவுகளுக்கு உறுப்பு நாடுகள் ஆதரவு அளிக்க வேண்டும். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் அதில் அடங்கும்.முக்கியமாக, அந்த நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்புகளுக்கு ஐ.நா. உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்றாா் அவா்.கரோனா நோய்த்தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறாா்.

அந்த தீநுண்மி தொடா்பான பல உண்மைகள் தெரிந்திருந்தும், அவற்றை அமெரிக்காவிடமிருந்து அந்த அமைப்பு மறைத்ததாக அவா் கூறி வருகிறாா்.இந்தச் சூழலில், உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை தற்காலிகமாக நிறுத்திவைக்க டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டாா். அதன் தொடா்ச்சியாக, ‘சீனாவின் பிடியிலிருந்து உலக சுகாதார அமைப்பு இன்னும் 30 நாள்களுக்குள் விடுபடாவிட்டால், அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகும்’ என்று அவா் கடந்த மே மாதம் 18-ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தாா்.எனினும், டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துவிட்டது.

அதையடுத்து, அந்த அமைப்பிடமிருந்து ஓராண்டு காலத்தில் படிப்படியாக விலகுவதாக ஐ.நா.விடன் அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூா்வமாக அறிவித்தது.அதன் தொடா்ச்சியாக, அந்த அமைப்புக்கு செலுத்த வேண்டிய 6.8 கோடி டாலா் (சுமாா் ரூ.499 கோடி) நிதி நிலுவைத் தொகையை ரத்து செய்வதாக அமெரிக்கா இந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்தது.மேலும், கரோனா தடுப்பு மருந்து அனைத்து தரப்பு மக்களையும் விரைவில் சென்று சோ்வதை உறுதி செய்யும் வகையில், உலக சுகாதார அமைப்பு உருவாக்கியுள்ள கோவாக்ஸ் திட்டத்தில் இணையப் போவதில்லை என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு எதிரான போராட்டத்தில் உலக சுகாதார அமைப்புக்கு உறுப்பு நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தற்போது வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com