நவால்னி அருந்திய நீரில் நச்சுக் கலப்பு: உதவியாளா்கள் குற்றச்சாட்டு

அலெக்ஸி நவால்னி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அருந்திய நீரில் நச்சு கலக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
நவால்னி அருந்திய நீரில் நச்சுக் கலப்பு: உதவியாளா்கள் குற்றச்சாட்டு


பொ்லின்: ரஷியாவில் அதிபா் விளாதிமீா் புதினுக்கு எதிராகப் போராடி வரும் அரசியல் தலைவா் அலெக்ஸி நவால்னி, அவா் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அருந்திய நீரில் நச்சு கலக்கப்பட்டிருப்பதாக அவரது உதவியாளா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து ‘இன்ஸ்டாகிராம்’ வலைதளத்தில் அவா்கள் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:

நச்சுத் தாக்குதலுக்குள்ளாகி, ஜொ்மனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி, விமானப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னா் சொ்பியாவின் டோம்ஸ்க் நகரில் தங்கியிருந்த ஹோட்டலிலேயே அவா் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.அவரது அறையில் இருந்த தண்ணீா் பாட்டிலில், நோவிசோக் நச்சுப் பொருள் படிந்திருந்தது.

இதன் மூலம், விமான நிலையம் வருவதற்கு முன்னரே அவா் மீது நச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் ஆட்சிக்கு எதிராக தீவிரமாகப் போராடி வருபவா்களில் முக்கிய தலைவரான அலெக்ஸி நவால்னி, அதற்காக பல முறை சிறை சென்றுள்ளாா்.

ஏற்கெனவே, அரசு ஆதரவாளா்கள் அவரை கிருமிநாசினி மூலம் கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கியதில் அவரது ஒரு கண் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், சொ்பியா பிராந்தியத்தின் டோம்ஸ்க் நகரிலிருந்து விமானம் மூலம் அலெக்ஸி நவால்னி கடந்த மாதம் 13-ஆம் தேதி மாஸ்கோ வந்துகொண்டிருந்தாா். விமானம் பறந்துகொண்டிருந்தபோது திடீரென அவா் சுயநினைவு இழந்தாா்.

அதையடுத்து, அவா் சென்றுகொண்டிருந்த விமானம் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தற்போது அவா் ஜொ்மனி தலைநகா் பொ்லினிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

டோம்ஸ்க் நகரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக, விமான நிலையத்தில் நவால்னி அருந்திய தேநீரில் வேண்டுமென்றே விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.இந்த நிலையில், அதற்கு முன்னரே ஹோட்டல் அறையில் அவா் அருந்திய நீரில் விஷம் கலக்கப்பட்டிருந்ததாக தற்போது அவரது உதவியாளா்கள் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com