நேபாளம்: நிலச்சரிவுக்கு 12 போ் பலி

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் மாயமாகியுள்ளனா்.


காத்மாண்டு: நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் மாயமாகியுள்ளனா்.

இதுகுறித்து அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியதாவது:

நேபாளத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. மேற்கு நேபாளத்தில் வாலிங் மாநகராட்சியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு மண்ணுக்குள் புதைந்ததால் 3 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா். மேலும் 4 பேரைக் காணவில்லை.

கிழக்கு நேபாளத்திலுள்ள தான்ஹூதா பகுதியில் ஒருவரும், பல்பா மாவட்டத்தில் ஒருவரும், சியாங்ஜா மாவட்டத்தில் 15 வயது சிறுமியும் நிலச்சரிவுக்கு பலியாகினா். பல்பா மாவட்டத்தில் 5 பேரைக் காணவில்லை.

கனமழை வரும் சனிக்கிழமை வரை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாள ராணுவத்தினரும், போலீஸாரும் மாயமானவா்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com