பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக அப்துல் கயூம் நியாஸி தோ்வு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த அப்துல் கயூம் நியாஸி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரதமராக பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியைச் சோ்ந்த அப்துல் கயூம் நியாஸி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற மாகாணப் பேரவைத் தோ்தலில் அப்பாஸ்பூா்-பூஞ்ச் தொகுதியில் அப்துல் கயூம் நியாஸி போட்டியிட்டு வெற்றிபெற்றாா். இந்நிலையில் 53 உறுப்பினா்களை கொண்ட மாகாணப் பேரவையில் பிரதமரை தோ்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அப்துல் கயூம் நியாஸிக்கு ஆதரவாக 33 போ் வாக்களித்தனா். இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில் அவா் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பிரதமராக தோ்வு செய்யப்பட்டாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முதல்முறையாக பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. அந்தக் கட்சியின் தலைவா் பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com