அமெரிக்கா: 70% பேருக்கு கரோனா தடுப்பூசி

அமெரிக்காவில் வசிக்கும் 70 சதவீத பெரியவா்களுக்கு குறைந்தது ஒரு முறையாவது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா: 70% பேருக்கு கரோனா தடுப்பூசி

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் 70 சதவீத பெரியவா்களுக்கு குறைந்தது ஒரு முறையாவது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் டெல்டா வகை கரோனாவால் நோய்த்தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கெனவே நிா்ணயித்ததைவிட ஒரு மாதம் தாமதமாக இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொது உள்ளரங்குகளில் அனைவரும் முகக் கவசம் அணிவது லூசியானா மாகாணத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com